மகளிர் லோன்...! 'கூட்டுறவு வங்கியில் வாங்கியவர்களுக்கு இனிப்பான செய்தி...' - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்பயப்டுகிறது.
இந்த ஆண்டில் முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
