ஒரு நாயகன் உதயமாகிறான்...! தமிழ்நாடு வெதர்மேன் தானா...! 3 வருஷத்தில் ஆளே மாறிட்டாரே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழை வந்தால் போதும் உடனே எல்லோருக்கும் ஒரு காலத்தில் ரமணன்தான் நினைவுக்கு வருவார். அவர் ஓய்வு பெற்றுப் போன பிறகு தற்போது தமிழக மனங்களில் தோன்றும் மனிதர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்தான்.
![Profile photo of TN Weatherman changed after 3 yrs on Facebook Profile photo of TN Weatherman changed after 3 yrs on Facebook](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-profile-photo-of-tn-weatherman-changed-after-3-yrs-on-facebook.jpg)
குறிப்பாக மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மழை குறித்த துல்லியமான தகவல்களை அறிவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படியாக, மழை எப்போது பெய்யும், எப்படிப் பெய்யும், எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கும், எந்த இடங்களில் எந்த அளவுக்கு பெய்யலாம் என்பது குறித்து, மிக எளிமையாக சாமான்ய மக்களுக்கும் எளிதாக புரித்துக் கொள்ளும் விதமான எடுத்துக்காட்டுக்களுடன் சொல்வார். இதனால் இவரை பின்தொடர்ந்து தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் அதிகம் ஆனார்கள்.
மழைக்காலங்களில் இவரது வானிலை அறிக்கை தான் அதிகம் பார்க்கப்படுகிறது. கடந்த மழைக்காலத்திலும் கூட இவர் மிகச் சரியாக மழையின் போக்கை கணித்துக் கூறியிருந்தார். வெப்ப நிலையாக இருந்தாலும் சரி, மழை, புயல் உள்ளிட்ட எந்த பேரிடராக இருந்தாலும் சரி துல்லியமாக சொல்வதைப் பார்த்து பலருக்கு ஆச்சரியம் .
புயல் காலத்திலோ அல்லது இப்போது பெய்த கன மழை காலத்திலோ ஒவ்வொரு மாடலையும் ஒரு நாளைக்கு 4 தடவையாவது கண்காணிப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். முந்தைய மாடலுக்கும், இப்போதைய மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களை ஆராய்ந்து, ஒரே மாதிரியாக இருக்கிறதா அல்லது மாறுதா என்பதை கவனிப்போம். அதேபோல புயல் சமயத்தின்போது ஒவ்வொரு அரை மணிக்கொரு முறை அது நிலை கொண்டுள்ள இடம், வேகம், கண் உள்ளிட்டவற்றை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் ஆய்வு செய்து அறிக்கைகளை துல்லியமாக சமர்பிப்பார்க. அதை சாதாரண மக்களும் எளிமையாக புரிவதற்கு வாழ்வில் இருந்து சில எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குவார். அது தான் மக்கள் இவரை வெகுவாக பின்தொடர்வதற்கு காரணம்.
இந்த நிலையில் தன்னுடைய முகநூல் கணக்கில் சுமார் மூன்று வருடங்கள் கழித்து தன்னுடைய புகைப்படத்தை மாற்றியுள்ளதாக புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நீண்ட காலம் கழித்து புகைப்படத்தை மாற்றியுள்ளதால், புதிய புகைப்படம் லைக்ஸ், கமெண்ட்ஸ் என தெறிக்க விட்டு முகநூலில் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)