BIGGBOSS6 TAMIL: "என்னையும் மரியாதையாக பேசுவார்னு நம்புறேன்".. விக்ரமன் பற்றி பேசிய கமல்ஹாசன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமலிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் GP முத்து.
பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை, சச்சரவுகள், கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுத்தன.
அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறை செல்லும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விக்ரமன் - அசீம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இருவரும் மாறி மாறி காரசாரமாக பேசிக்கொண்ட நிலையில், இறுதியில் சமரசமாகி ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகர் கமல்ஹாசன், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது, விக்ரமன் - அசீம் இடையே நடந்த வாக்குவாதம் பற்றி பேசிய கமல்,"விக்ரமன் சுயமரியாதைக்காக போராடினார். சுயமரியாதையை அசீம்க்கு கொடுத்தார். வெளியில் வந்தாலும் அவர் இப்படியே இருப்பார் என நம்புகிறேன். என்னையும் அவமரியாதையாக பேசமாட்டார் என நம்புகிறேன்" என்றார்.