'எஸ்.ஏ.சி. விவகாரத்தின்போது நீக்கப்பட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் புகார்!'... எதனால்? நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Jan 07, 2021 07:57 PM

விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார்.

Vijay complaints over ex members of his fans movement

நடிகர் விஜய் தனக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது விருகம்பாக்கத்தில் அளித்துள்ள புகாரின்படி, அவர்கள் இருவரையும் தம் குடியிருப்பில் இருந்து காலி செய்யும்படி கேட்டதாகவும், அவர்கள் அதற்கு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரவிராஜா மற்றும் குமார் ஆகிய 2 பேரை, நடிகர் விஜய், சாலிகிராமத்தில் இருக்கும் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்க வைத்திருந்தார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளாக அப்போது இருந்த இவர்கள், விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்தபோது, அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இதனால் இந்த இருவரையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு விஜய் அளித்த உத்தரவின்படி, இருவரும் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

ALSO READ: ‘படிக்க வெச்ச இன்ஜினியரிங் வீண் போகல!’... கடலில் மூழ்கியவர்களின் உயிரைக் காத்த ட்ரோன்.. கெத்து காட்டிய கல்லூரி மாணவர்!

பின்னர் தமது குடியிருப்பில் இருந்து காலி செய்யும்படி இருவருக்கும் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்ததை அடுத்து இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விஜய் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vijay complaints over ex members of his fans movement | Tamil Nadu News.