திரையில் வில்லன்.. நிஜத்தில் ‘ஹீரோ’.. சோனு சூட்டுக்கு ‘கோயில்’ கட்டிய ரசிகர்கள்.. சிலை செய்த ‘சிற்பி’ சொன்ன உருக்கமான பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இல்லாமல், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த மக்களுக்கு நடிகர் சோனு சூட் தொடர்ந்து உதவி செய்து வந்தார். மேலும் தன்னிடம் சமூக வலைதளங்களில் உதவி கேட்பவர்களுக்கு உடனே நேரில் சென்றே உதவி செய்தார். இப்படி மக்களுக்கு உதவி செய்வற்காக கோடிக்கணக்கான பணத்தை அவர் செலவிட்டுள்ளார். இதனால் தனது கையிலிருந்த சேமிப்பு பணம் தீர்ந்ததால், சமீபத்தில் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடமானம் வைத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் சோனு சூட்டின் சேவையை பாராட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துபண்டா தந்தா கிராம மக்கள் சோனு சூட்டுக்கு சிலை எழுப்பி கோயில் கட்டியுள்ளனர். மேலும் கோயிலை அலங்கரித்து தீபாரதனை காட்டியும், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடியும் வழிபட்டனர்.
இதுகுறித்து தெரிவித்த கிராம மக்கள், ‘தனது சிறப்பான செயல்கள் மூலம் சோனு சூட் கடவுள் இடத்தை அடைந்துவிட்டார். அதனால்தான் அவருக்கு நாங்கள் கோயில் கட்டியுள்ளோம். அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சோனு சூட்டியில் சிலை உருவாக்கிய சிற்பி மதுசூதன் பால் கூறுகையில், ‘நடிகர் சோனு சூட் தான் செய்த உதவிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். அவருக்கு பரிசாக இந்த சிறிய சிலையை உருவாக்கியுள்ளேன்’ என மகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
