VIDEO: 'வெயிட்' ரொம்ப அதிகம் அதனால என்ன?... செம 'ஸ்கெட்ச்' போட்டு... மர உச்சிக்கு மானை 'அலேக்காக' தூக்கிச்சென்ற சிறுத்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுத்தை ஒன்று மானை கொன்று, அதனை மரத்தின் உச்சிக்கு தூக்கிச்செல்லும் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்டு இருக்கிறார். காருக்குள் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று மரத்திற்கு அடியில் நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகில் வேட்டையாடப்பட்ட மான் ஒன்று இறந்த நிலையில் கிடக்கிறது. மரத்தையும், இறந்து கிடக்கும் மானையும் மாற்றி,மாற்றி பார்க்கும் சிறுத்தை சட்டென்று மானை வாயில் கவ்விக்கொண்டு மரத்தின் மீது படுவேகமாக ஏறிச்செல்கிறது.
Unbelievable climb. Do You know a #leopard can take three times heavy prey & can climb a straight tree. In their territory many a times you can see leftover on trees also. Close shot. Sent by a friend. pic.twitter.com/kXrkSpqLq8
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 28, 2020
பிரவீன் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், '' நம்ப முடியாத வகையில் மரத்தில் ஏறுகிறது சிறுத்தை. தன்னைவிட 3 மடங்கு அதிகமான இரையை கவ்விக்கொண்டு சிறுத்தையால் மரத்தில் ஏற முடியுமென்பது உங்களுக்குத் தெரியுமா?,'' என பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 11,200 லைக்குகளும், 3800 ரீ-ட்வீட்டுகளும் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது. வீடியோ பார்த்த பலரும் என்ன ஒரு துல்லியமான கணக்கு என வியந்து வருகின்றனர்.
