‘இலவச சேவை’ வழங்கப்போகும் NETFLIX.. எப்போ தெரியுமா..? வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்முன்னணி OTT தளமான நெட்ப்ளிக்ஸ் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்கள் தங்கள் பொழுதை கழிக்க நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களை அதிகமாக நாடினர். இந்த சமயத்தில் பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் நெட்ப்ளிக்ஸில் இணைந்தனர். இதனால் புதிய வாடிக்கையாளர்களை கவர பல சலுகைகளை நெட்ப்ளிக்ஸ் வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஏதேனும் இரு வார இறுதியில் தங்களது சேவையை இலவசமாக வழங்க நெட்ப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை இந்தியாவில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் Chief Product Officer கிரெக் பீட்டர்ஸ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு புது முயற்சியாக இதை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், எங்கள் சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அவர்கள் அறிந்துகொள்ள உதவும். அதேவேளையில் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் தளத்தில் இணைய இது உதவும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச சேவை எப்போது வழங்க உள்ளது என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்கா தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நெட்ப்ளிக்ஸ் 30 நாட்கள் இலவச டிரையல் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனுடன் சேர்த்து இந்த வார இறுதி நாட்கள் இலவச சேவையும் இருக்கும் என சொல்லப்படுகிறது.