'சுதந்திர தின விழாவில்'...முதலமைச்சரின் 'அதிரடி' அறிவிப்பு...'புதுசா பிறக்கப்போகும் 2 மாவட்டங்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 15, 2019 10:37 AM

நாட்டின் 73வது சுதந்திர விழா நடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றினார்.

Vellore district to be trifurcated says TN CM Edappadi K Palaniswami

அப்போது பேசிய முதலமைச்சர், இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைக் திணிக்கக்கூடாது என்றும், இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது. மேலும் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டம் செயல்படுத்தபட இருப்பதாக கூறிய முதல்வர், இதன் மூலம் காவிரி ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Tags : #EDAPPADIKPALANISWAMI #VELLORE DISTRICT #RANIPET #KATPADI #TRIFURCATED