'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 18, 2019 09:35 AM

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குதொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Edappadi K Palanisamy cast his vote at a polling station in salem

இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். சேலம் மாவட்டம்  சிலுவம்பாளையம் பகுதிக்குட்பட்ட வாக்கு சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.காலையிலேயே தனது வாக்கினை பதிவு செய்ய வந்த அவர்,மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்.

தனது வீட்டின் அருகிலேயே வாக்கு சாவடி இருந்ததால் முதல்வர் நடந்தே வந்தார்.முதலவர் வாக்களிக்க வந்ததால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.