‘கொடூரமாக மிதித்துக் கொன்ற யானை..’ தோட்டத்துக்குச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 17, 2019 05:51 PM

கோத்தகிரி அருகே தோட்டத்துக்குச் சென்ற விவசாயி ஒருவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Farmer killed in elephant attack near kotagiri

நீலகிரி மாவட்டம் அரக்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலன் (73) என்பவர் பொம்மன் காபி தோட்டம் அருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற பாலன், இன்று காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரது உறவினர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு ஆய்வு செய்து பார்த்தபோது பாலன் யானை மிதித்து இறந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து  பாலனின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண நிதியான ரூ.3 லட்சத்திலிருந்து முதற்கட்டமாக ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது.

Tags : #KOTAGIRI #ELEPHANTATTACK #FARMER