'ஃபேஸ்புக்ல திருமண கோலத்தில் காதலன்...' 'என்கேஜ்மென்ட் முடிஞ்சத கூட சொல்லாம லிவிங் டுகெதர்...' - அதிர்ச்சியின் உச்சத்தில் காதலி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் செய்துக் கொள்வதாக கூறி மும்பையை சேர்ந்த பெண்ணுடன் லிவிங் டூகெதரில் இருந்துவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருச்சியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.

மும்பையை பூர்விகமாக கொண்ட 28 வயதான பூஜா என்ற பெண் கடந்த 2016ம் ஆண்டு சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது தோழியின் நண்பரும் சாப்ட்வேர் இன்ஜினியருமான 33 வயதான தினேஷ் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் தினேஷிற்கு நட்பு காதலாக மாறியுள்ளது. தினேஷின் காதலை ஏற்காத பூஜா 2018-ஆம் ஆண்டு படிப்பு முடிந்து மும்பைக்கு சென்றுள்ளார். தன் காதலை ஏற்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்ள போவதாக தினேஷ் போன் மூலம் மிரட்டியுள்ளார். மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் தினேஷ் தற்கொலை செய்துகொண்டு விடுவார் என பயந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த பூஜாவை தினேஷ் கிழக்கு கடற்கரை சாலையில் தனி வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதில் ஒருமுறை பூஜா கருவுற்றதாகவும் இருவரும் சேர்ந்து அதைக் கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தந்தை இறந்துவிட்டதாக கூறி திருச்சி சென்ற தினேஷ் அதன்பின் வாரம் ஒருமுறை மட்டும் பூஜாவைத் தொடர்பு கொண்டு பேசிய தினேஷ், பின்னர் பேசுவதையே நிறுத்தி விட்டார் எனக்கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன் தினேஷ் உறவினர் ஒருவர் அவரின் முகநூல் பக்கத்தில், தினேஷ் வேறொரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் இருந்த புகைப்படத்தை பூஜா பார்த்துள்ளார். அதன்பின்னரே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தினேஷுக்கு திருமணம் ஆனதும், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே, தினேஷ் தன்னை சென்னை வரவழைத்து ஒன்றாக வாழ்ந்ததும் தெரியவந்ததுள்ளது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத பூஜா தேசிய பெண்கள் ஆணையத்திலும், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் தொடர்ந்து அடையாறு துணை ஆணையரிடமும் நேரில் புகார் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
