“ரூம் போட்டாச்சு.. அவன் கண்ணுல மண்ண தூவிட்டு வந்துடு”.. சக அதிகாரியின் மனைவியுடன் காவலர் போட்ட திட்டம்.. கேமராவில் பார்த்த காட்சியால் நொறுங்கிப் போன கணவர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 23, 2020 07:41 PM

பிரிட்டனில் காவலர் ஒருவர் பெண் காவலர் ஒருவருடன் தவறான உறவு வைத்துக்கொள்வதற்காக திட்டமிட்ட செய்தியை, அந்த பெண் காவலரின் வீட்டு வாசலில் இருந்த கேமரா அவரது கணவருக்கே தெரியப்படுத்திய சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

Doorbell camera catches deputy chief constable affair

சர்வே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றும்  Nev Kemp(48) என்பவரின் ஹோட்டல் ஒன்றில் Rachael Johnson (38) என்கிற பெண் போலீசாருடன் அறை எடுத்து தங்குவதற்கு திட்டமிட்டு, அந்த திட்டத்தை தொலைபேசி மூலமாக Nev Kemp, Rachaelக்கு  தெரிவித்தார்.

ஆனால் அந்த அழைப்பு எதிர்பாராதவிதமாக Rachael-லின் வீட்டு வாசலில் இருந்த கேமரா மூலமாக, அவரின் கணவரான Ross Johnson (40)-க்கு சென்று சேர, போலீசான Ross Johnson நேரலையில் அந்த உரையாடலை கேட்டுவிட்டார்.

இதனை அடுத்து, Johnson தன் மனைவியை அழைத்து விசாரிக்க,  Kemp-க்கும் தனக்கும் இடையில் தவறான உறவு இருப்பது உண்மைதான் என Rachael ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கடுப்பான Ross Johnson இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை துவங்கும் என தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Doorbell camera catches deputy chief constable affair | World News.