"தமிழகம் முழுவதும் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் 'புதிய' மாற்றம்"!.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 02, 2021 07:56 PM

தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் மாற்றம் கொண்டுவரப்போவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

tneb electric digital meter to smart meter senthil balaji

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "கடந்த ஆட்சி காலத்தில் 9 மாத காலம் மேற்கொள்ளாமல் இருந்த மின் பராமரிப்பு பணிகள் தற்பொழுது 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிதாக மின் இணைப்பை பெறுபவர்களுக்கு மின் கம்பம் மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவு தொகையை மின் நுகர்வோரிடம் பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் மீட்டராக இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் இலக்கு. உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும் விநியோகமாகும் மின்சாரத்திற்கும் இடைவெளி அதிகமாக உள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் வாரியத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விரைவில் ஆய்வு செய்து சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் வாரியம் பெற்றுள்ள 1 லட்சத்து 59 கோடி கடனுக்கு 9.6 வட்டி விகிதமாக ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மின் வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையால் வட்டி தொகையில் 2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

2006 முதல் 5 ஆண்டுகள் மின் தேவை அதிகரித்த நேரத்திலும் மின் வழித்தடம் அதிகமாக இல்லாத நிலையில் கூட தனியாரிடமிருந்து யூனிட்டிற்கு 3 ரூபாய் 58 பைசாவிற்கு வாங்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 5 ரூபாய் 1 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

உப்பூர் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tneb electric digital meter to smart meter senthil balaji | Tamil Nadu News.