'திருமணமான கையேடு புதுமண தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்'... 'இதுக்கு பெரிய மனசு வேணும்'... குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 17, 2021 10:24 PM

திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் செய்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newly married couple donated 51,000 to CM Public Relief Fund for COVID

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி. இவருக்கு ஹரிபாஸ்கர் என்ற மகன் இருக்கிறார். ஹரிபாஸ்கர் நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

Newly married couple donated 51,000 to CM Public Relief Fund for COVID

அதன் படி இவர்களின் திருமணம் மே 17-ஆம் திகதி முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தம்பதி தங்கள் திருமணத்தை மிகவும் எளிமையாக நடந்த முடிவு செய்தனர்.

அதன்படி ஹரிபாஸ்கர், சாருமதி தம்பதிக்குத் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. பின்னர் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்த 51,000 ரூபாயைத் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். அதன் படி, திருமணம் முடித்த கையேடு உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரிடம், இத்தம்பதியினர் அந்த பணத்தை வழங்கினர்.

Newly married couple donated 51,000 to CM Public Relief Fund for COVID

இந்த நிதியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்தனர். திருமணம் முடிந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தங்கள் சேமிப்பை முதல்வரின் நிவாரண நிதிக்குத் தம்பதி வழங்கியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #DMK #MKSTALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Newly married couple donated 51,000 to CM Public Relief Fund for COVID | Tamil Nadu News.