திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 29, 2021 08:13 PM

திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்.

DMK MP A Rasa wife Parameswari passed away

திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி மார்பக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆ.ராசா மருத்துவமனையில் இருந்து மனையின் சிகிச்சைகளை கவனித்து வந்தார்.

DMK MP A Rasa wife Parameswari passed away

சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தனர். முன்னதாக ரெலா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

DMK MP A Rasa wife Parameswari passed away

இந்நிலையில் இன்று (29.05.2021) மாலை சுமார் 7 மணியளவில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது இறுதிச்சடங்கு பெரம்பலூரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMK MP A Rasa wife Parameswari passed away | Tamil Nadu News.