'சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா'... 'முதல்வர் ஸ்டாலின் இத செய்வாருன்னு யாரும் நினைக்கல'... நெகிழ்ந்து போன எம்.எல்.ஏக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
தமிழக சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று புதிதாகச் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
இவர்களில் 2 அமைச்சர்கள் கொரோனா பாதிப்பு காரணமாகச் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி , முன்னாள் சபாநாயகர் தனபால், துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம் , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள், அவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் , அகர வரிசைப்படி பதவியேற்றுக் கொண்டார்கள்.
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் , பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த நிலையில், கட்சி பாகுபாடின்றி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கட்சி பாகுபடுயின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொண்டது சட்டமன்ற உறுப்பினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.