கொரோனாவுக்கு எதிரான போரில்... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!.. மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகளில் பங்கெடுக்க பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியா முழுவதும் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திவருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வர, தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.
எனினும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நலப்பணிகளுக்காகவும், மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தமிழக அரசுக்கு நிதி தேவைப்படுகிறது.
அதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க பொதுமக்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றிட அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒன்று கூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.
மேலும், பெறப்படும் நன்கொடை-மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் வழங்கப்படுவதோடு, 100% வரிவிலக்கும் உண்டு எனவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நாள் முதல் தற்போது வரை பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கொரோனா நிவாரண நிதி நன்கொடை மற்றும் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ததன் மூலம், இந்த அரசின் மீது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
நன்கொடை அளிப்பதற்கான விவரங்கள் பின்வருமாறு:-

மற்ற செய்திகள்
