'இந்த பார்சல் மேல தான் டவுட்டா இருக்கு...' 'ஸ்கேன் பண்ணி பார்த்தபோவே ஓரளவு உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சிடுச்சு...' - பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை விமான நிலையத்தில் சேலத்தில் இருந்து உத்திரபிரதேச மாவட்டத்தில் இருக்கும் ஒருவருக்கும் மர்ம பார்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு எதிராக ஒரு பார்சல் தென்பட்டுள்ளது.
அதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பார்சலை ஸ்கேன் செய்த போது அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்தப் பார்சலில் துப்பாக்கி போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது.
அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பார்சலைத் தகுந்த பாதுகாப்புடன் பிரித்தபோது அதில், ஒரு கைத் துப்பாக்கி, குண்டுகளுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தத்துடன் கைத் துப்பாக்கியையும் போலீசாரிடம் ஒப்படைத்ததுள்ளனர்.
வழக்குப் பதிவுசெய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்தப் பார்சல் சேலம் மாவட்டம், சேர்மன் சின்னையா ரோடு பகுதியில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பெறுநர் முகவரியில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பார்சல் அனுப்பிய டாக்டர் சாமுவேல் ஸ்டீபனை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.