'உயிர் நண்பனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்'... நெகிழ்ந்துபோன உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 13, 2021 03:55 PM

உதயநிதியின் நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Anbil Mahesh Poyyamozhi give surprise gift to Udhayanidhi stalin

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார்.

இந்நிலையில் உதயநிதியின் நெருங்கிய நண்பரும் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Anbil Mahesh Poyyamozhi give surprise gift to Udhayanidhi stalin

அமைச்சர் பதவியேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என உறுதி அளித்தார். இந்நிலையில் சென்னையில் நண்பர் உதயநிதி ஸ்டாலினை அன்பில் மகேஷ் சந்தித்தார். அப்போது, உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைப்பதற்கு, பெரிய புகைப்படம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார். அதில்

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்” -என்ற திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது.

Anbil Mahesh Poyyamozhi give surprise gift to Udhayanidhi stalin

இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடந்துகொள்வதுதான், ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் ஆகும். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அன்பில் மகேஷ் அளித்த புகைப்படம் அமைந்திருந்தது. நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஷின் எதிர்பாராத பரிசு உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இத்தகவலை அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அதில், ‘கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச்  சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரீஸ் மாப்பிள்ளை அவர்களும் பரிசாக வழங்கினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anbil Mahesh Poyyamozhi give surprise gift to Udhayanidhi stalin | Tamil Nadu News.