'முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி சென்ற மனைவி துர்கா ஸ்டாலின்'... 'கவனம் பெற்ற பயணம்'... பின்னணியில் இருக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 18, 2021 10:07 AM

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Reason behind Durga Stalin delhi visit with CM Stalin

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். கடந்த மாதமே அவர் பதவியேற்றிருந்தாலும், கொரோனா தடுப்பு பணிகளில் அவர் தீவிரம் காட்டி வந்ததால் அவர் டெல்லி செல்லவில்லை. ஆனாலும், கொரோனா தொற்று குறைந்தவுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பேன் எனவும், தமிழக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Reason behind Durga Stalin delhi visit with CM Stalin

அந்த வகையில் நேற்று பிரதமரை ஸ்டாலின் சந்தித்துப் பேசிய நிலையில், தமிழகத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது எனக் குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

Reason behind Durga Stalin delhi visit with CM Stalin

இதற்கிடையே டெல்லி சென்ற ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். இந்த பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து பேசிய திமுகவின் மூத்த தலைவர்கள், ''முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஸ்டாலின் தனது உடல்நிலையைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை என்ற கவலை துர்கா ஸ்டாலினை வாட்டி வதைக்கிறது.

Reason behind Durga Stalin delhi visit with CM Stalin

அதோடு தனது உடல்நிலையைப் பற்றி கவலை கொள்ளாமல் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளைச் சந்தித்தது அவரை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் ஸ்டாலினை அருகிலிருந்து கவனித்து அவருக்குச் சரியான நேரத்திற்கு உணவு உள்ளிட்டவற்றைக் கொடுக்கவே முதல்வர் ஸ்டாலினுடன் அவர் சென்றுள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Reason behind Durga Stalin delhi visit with CM Stalin | Tamil Nadu News.