"இனி சாதிப் பெயரே வேணாம்".. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை ..அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிகளில் மாணவர்கள் தங்களது சாதி பெயரை குறிப்பிடத் தேவை இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

முன்னாள் NSE அதிகாரி சித்ராவுக்கு ஜாமீன் மறுப்பு.. "வீட்டு சாப்பாடு".. கோரிக்கைக்கு பரபரப்பு பதில்!
தமிழகத்தில் மாணவர்களின் வருகைப்பதிவு, சாதி, முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கும் விதத்தில் எமிஸ் (EMiS) என்னும் திட்டம் கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று சென்னையில் செய்தியாளர்ளை சந்தித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
EMIS
மாணவ, மாணவியரின் பெயர்கள், முகவரி, உணவு விபரங்கள், வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை கல்வி மேலாண்மைத் தகவல் மையம் (Education management information system) எனப்படும் இணையதளத்தில் வெளியிடுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மாணவ, மாணவியர்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு இந்த எமிஸ் தரவுகள் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருக்கிறார்.
சாதி பெயர்
எமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் தங்களது சாதி பெயரை குறிப்பிடுவது குறித்து பேசிய அமைச்சர்," மாணவர்கள் கண்டிப்பாக தங்களது சாதியை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் எந்த இடத்திலும் தனது சாதியின் பெயரை வெளியிட விரும்பவில்லை என தைரியமாக தெரிவிக்கலாம். எமிஸ்-ஐ பொறுத்தவரையில் அவர்கள் BC, MBC உள்ளிட்ட எந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்பதை தெரிவித்தால் போதுமானது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சேர வேண்டிய உதவிகள் கிடைத்திட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். அதை நோக்கியே செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
பெண் குழந்தைகளின் சுகாதார தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அதுகுறித்த விளக்கத்தையும் அளித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில்," சுகாதாரத் துறை எங்களிடம் இருந்து பெண் குழந்தைகளின் சுகாதாரம் குறித்த தகவல்களை அளிக்கும்படி கோரிக்கை வைத்து இருக்கிறது. சுகாதார துறையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த கோரிக்கை இருந்தாலும் எந்தெந்த கேள்விகளை மாணவிகளிடம் கேட்கலாம்? என்பதிலும் கவனமாக உள்ளோம். இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
கபடி மேட்சுக்கு நடுவே கேட்ட துப்பாக்கி சத்தம்.. பிரபல இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்..

மற்ற செய்திகள்
