இருக்குற ‘கடினமான’ சூழ்நிலையிலும்... ‘ஆயிரக்கணக்கான பேருக்கு’ புதிய வேலைவாய்ப்புகள்...! - அசத்தும் ‘தமிழக அரசின்’ புதிய ‘இணையதளம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பல கோடி பேர் இந்தியாவில் வேலையிழந்து திண்டாடி வருகின்றனர்.

இத்தகைய கடினமான சூழ்நிலையில், தமிழக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு போர்டல் மூலம் 6000 வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டி மூன்று வாரங்களுக்கு முன் தமிழக அரசால் இந்த வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மட்டுமில்லாது, அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 440 நிறுவனங்கள் வரை தமிழக அரசின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. மேலும் வேலை தேடும் 25,000 பேர் வரை, முழு நேர, பகுதி நேர மற்றும் பயிற்சி போன்ற பதவிகளில் வேலை வேண்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ மொபைல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழிநுட்பம் உட்பட பல பிரிவுகளில் 4000 ரூபாய் முதல் 50,000 வரை சம்பளத்திற்கான வேலைகள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் ஓசூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
