கொரோனா 'சென்னை'யில் குறைந்து... மற்ற மாவட்டங்களில் 'அதிகரித்த' காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று சென்னையில் குறைந்து பிற மாவட்டங்களில் அதிகரித்ததன் காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை மாவட்டம் இருந்த நிலை தற்போது மாறி வருகிறது. சிகிச்சையில் இருந்தோர் குணமடைந்த விகிதமும் தற்போது 80% நெருங்கி உள்ளது. இந்த நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க காரணம் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், '' சென்னை மக்கள் கொரோனா குறித்து தெரிந்து கொண்டு விட்டார்கள். ஊரடங்குக்கும் ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால் சென்னையில் நோய்த்தொற்று பரவாது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை மதுரையில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை கொரோனா அதிகரித்து பின்பு குறையும்.
நாங்கள் இப்போது இறப்பு விகிதத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். பொது இடங்களில் நடமாடும் மக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மாஸ்க் அணிவதில்லை. அப்படி இருக்கக்கூடாது என்று மீண்டும், மீண்டும் சொல்லி வருகிறோம். சில மாவட்டங்களில் கொரோனா டெஸ்ட் அதிகளவில் எடுத்து விட்டார்கள். அதனால் தான் புள்ளி விவரங்களில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுகின்றன,'' என தெரிவித்து இருக்கிறார்.