தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் காய்கறி மற்றும் பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலில் ஒரு வாரத்துக்கு முழு ஊரங்கு அமல்படுத்த வலியுறுத்தினர். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில், கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுகுறித்து பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என முதல்வர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
