VIDEO: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் மே 24-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் ஊரடங்கு சமயத்தில் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றி வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று முன்தினத்தில் இருந்து இ-பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்பவர்கள் கட்டாயம் இ-பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து போகப்போக தான் தெரியவரும். ஊரடங்கால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால், கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.