சென்னை மாநகராட்சியின் தேர்தல் முன்னணி நிலவரம்.. எந்தக் கட்சி முன்னிலை?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னை மாநகராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி நிலவரங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 21 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற பல இடங்களிலும் சென்னை முன்னைனியில் உள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களாக உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் 90% இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது.
தற்போது, சென்னை மாநகராட்சி வார்டு எண் 174ல் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாஜக கட்சியும், மூன்றாவது இடத்தில் அதிமுக கட்சியும் பிடித்துள்ளது
திமுக: 21
அதிமுக:
பாமக:
மநீம:
பாஜக:
நாம் தமிழர்:
மற்றவை: