'திருமண' புகைப்படத்தை பகிர்ந்து... ரசிகர்களுக்கு 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த 'இந்திய' கிரிக்கெட் 'வீரர்'... வாழ்த்து மழையில் நனைந்த காதல் 'ஜோடி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Dec 22, 2020 10:16 PM

பிரபல இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்த்ர சாஹல், தனது ரசிகர்களுக்கு சிறப்பான ஆச்சர்யம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.

Yuzvendra Chahal gets married to Dhanashree varma

சாஹல் மற்றும் நடன இயக்குனரும், யூடியூபருமான தனஸ்ரீ வர்மா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் சாஹல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இருவரின் திருமணமும் இன்று குருகிராமில் நடைபெற்றது. 

 

சாஹல் திருமணம் குறித்து எதுவும் தகவல் தெரியாமல் இருந்து வந்த நிலையில், திடீரென சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோர் தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை ஒரே கேப்ஷனுடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். இவர்களின் திருமண புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வரும் நிலையில், பலர் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yuzvendra Chahal gets married to Dhanashree varma | Sports News.