'என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...'- நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் 'நண்பேண்டா' மொமென்ட் வைரல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். எப்போதும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

குறிப்பாக தன்னுடைய விமர்சனங்கள் மற்றும் விளக்கங்களை உடனுக்குடன் எந்த வித ஒளிவு மறைவுமின்றி தெரிவிப்பவர் என்று பெயர் பெற்றுள்ளார் பி.டி.ஆர். இப்படி அரசியல், அரசுப் பணி என்று தொடர்ந்து பிஸியாக இருக்கும் பி.டி.ஆர், சமீபத்தில் தன் அமெரிக்க நண்பருடன் மதுரையில் உள்ள ஓர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டு உள்ளார். அது குறித்து அவர் பதிவட்ட ட்வீட்டும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த குறிப்பிட்ட ட்வீட்டில் பி.டி.ஆர், "சில விஷயங்கள் தொடர்கின்றன. சில விஷயங்கள் மாறியுள்ளன. நான் உணவருந்திய இடம் ‘திராவிட உணவகம்’. மதுரையில் நான் பயின்ற பள்ளி வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகிலேயே இருக்கும் உணவகம் இது. 1981-ம் ஆண்டு இதே பள்ளியில் மாணவனாக இருந்த போது, இந்த உணவகத்துக்கு வருவதற்கு சக மாணவர்கள், 3 மணி அளவில் போட்டா போட்டி போடுவார்கள்.
2021-ம் ஆண்டு நான் லோக்கல் எம்.எல்.ஏ- வாகவும், தமிழ் நாட்டின் நிதித் துறை அமைச்சராகவும் இருக்கிறேன். என்னுடன் உணவு சாப்பிடும் நண்பன் ஆனந்த் செல்வா. சிட்டி குளோபல் கஸ்டமர் வங்கியின் சிஇஓ. நியூயார்க்கில் இருந்து என்னைப் பார்க்க வந்தார். திராவிட உணவகத்தில் உணவருந்திய போது" என்று ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் பிடிஆர்.
வசதியும் வாய்ப்பும் வந்து எத்தனை உயரத்துக்குச் சென்றிருந்தாலும் பழமையை மறக்காமல், சிறு வயதில் தான் சாப்பிட்ட சாதாரண ரோட்டுக் கடையில் மீண்டும் நண்பருடன் பிடிஆர் உணவு சாப்பிட்டதும், அதைப் பற்றி பதிவிட்டதும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
