சாதாரண ‘விவசாய’ குடும்பத்தில் பிறந்த ‘முதல்வர்’ பழனிச்சாமியின்.. மறுக்கவும் மறக்கவும் முடியாத சாதனைகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மறுக்கவும் மறக்கவும் முடியாத 10 சாதனைகள்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படைத்த சாதனைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழக முதல்வராக பதவியேற்றதும் மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயலாற்றி வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தற்போது வரை செய்த மிக முக்கியமான 10 சாதனைகள் எவராலும் மறக்க முடியாதவைகளாக இடம்பெற்றுள்ளன.
1. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு :
காவிரி மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
2. குடிமராமத்து திட்டம் :
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவழித்து குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 90 சதவீத ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு நீரை சேமிப்பதற்கு தகுதியான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளன.
3. கோவிட் 19 கையாளும் திறன் :
கோவிட் 19 பேரிடர் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து பல திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்தியாவிற்கே தமிழகம் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நோயாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. முதலீடுகள் :
கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ரூபாய் 3000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
5. அத்திக்கடவு அவினாசி திட்டம் :
எம்ஜிஆரின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நனவாக்கியுள்ளார்.
6. மருத்துவ கல்லூரிகள் :
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவக் கல்வி என்பது சிரமமான ஒன்றாக இருக்காது என நம்பலாம்.
7. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை :
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகிறது. மக்கள் நலம் பாதிக்கப்பட்டு வருகிறதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
8. தேர்வுகள் ரத்து :
கொரானா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பதினோராம் வகுப்பு தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு, தேர்ச்சி என்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
9. 6 புதிய மாவட்டங்கள் :
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதில் இருந்து தற்போது வரை 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
10. உழவன் ஆப் :
விவசாயிகள் விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து கொள்ள உழவன் ஆப் என்ற செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் விவசாய பெருமக்கள் தங்களின் குறைகளை கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .