முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. நாளை அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் நிலையில்... இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே தீவிர ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே நேற்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழிகாட்டு குழுவில் இடம்பெற போகும் உறுப்பினர்கள் யார் - யார்?, அந்த குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கும்? என்பது குறித்து இன்று இருதரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இருக்கும். அதில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுவிட்டால், நாளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இதுகுறித்த அறிவிப்பையும் ஒன்றாக இணைந்து வெளியிடுவார்கள். நேற்று பேச்சுவார்த்தையில் நடந்த முன்னேற்றம் குறித்து இருதரப்புக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்பட நிலையில், முதல்வர், துணை முதல்வர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர்.
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது, அந்த குழுவிற்கு எத்தகைய அதிகாரம் வழங்குவது என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று மாலையில் தேனியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தார்.
இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்தினர்.
வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறும் பெயர்களை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நிறைவு பெற்றது. ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில் முதலமைச்சரை சந்திக்க உள்ளனர்.

மற்ற செய்திகள்
