"என் ஆயுளின் கடைசி விநாடி வரை"... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான கடிதம்!.. தொண்டர்கள் நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுக முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிறது. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக கட்சி தொண்டர்களுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இந்த உச்ச பதவிக்கு தான் வந்திருப்பதைப் பற்றி நெகிழ்ந்து கூறியுள்ளார்.
மேலும், கட்சிக்கு உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உழைக்கும் யாவரும் இத்தகைய உச்ச பதவிக்கு வர முடியும் என்பதற்கு சான்றாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சிய அரசை படைக்க, வரும் சட்டமன்ற தேர்தலில், மீண்டும் அதிமுக வெற்றி பெற வேண்டும் எனவும், அதன் பொருட்டு 'குருதியிலே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்' என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
