'நம்மில் ஒருவர்'... 'தேர்தலுக்கான பணியை தொடங்கிய அதிமுக'... முதல்வர் எடப்பாடி போட்ட ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தனது சட்டமன்ற தேர்தல் பணியை அதிரடியாகத் தொடங்கியுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே போட்டியிடுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில் ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷனை தொடங்கியது.
இதற்கிடையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.
புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/2dR9cjLDNC
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 7, 2020

மற்ற செய்திகள்
