‘அவர் சொல்றது உண்மைதான்’... ‘ரஜினி கருத்துக்கு’... 'ஆதரவு தெரிவித்த கமல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 14, 2019 07:40 PM

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூயிருந்த கருத்துக்கு, கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

kamal hassan interview on rajini statement about politics

சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அதில், ‘தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என்று தெரிவித்துள்ளார். நல்ல ஆளுமைக்கு கண்டிப்பாக வெற்றிடம் உள்ளது என்று கூறிய அவர், முதலமைச்சர் என்னை குறித்து பேசியது அவரது கருத்து என்றார்.

ரஜினி தான் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று மு.க.அழகிரி கூறியது அவரது கருத்து என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாட்டில் அதற்கான சுதந்திரம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும், தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.