'முதல்வரது தாயாரின் இறுதி சடங்குக்காக.. காரில் சென்றபோது துரைக்கண்ணுவுக்கு நடந்தது என்ன?'.. காலமான வேளாண் அமைச்சருக்கு முதல்வர் அஞ்சலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு மறைந்தார். அவருக்கு வயது 72.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவருக்கு சிகிச்சையளித்த காவிரி மருத்துவமனை அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சிப் பணியாற்றிய அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு வேதனை தருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்ரின் தாயார் கடந்த 12-ஆம் தேதி இரவு சேலத்தில் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள முதல்வருடன் துரைக்கண்ணுவும் காரில் புறப்பட்டார்.
அப்போது விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. உடனே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், பின்னர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். இதனை அடுத்து சென்னையிலுள்ள காவிரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சி.டி. ஸ்கேனில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவரவும், உடல்நிலை மோசமானது, இதனால், அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டது.இந்த நிலையில், சனிக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் துரைக்கண்ணு மரணமடைந்தார்.
1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்த துரைக்கண்ணு 2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார், முன்னதாக இதே தொகுதியில் அதிமுக சார்பில் 2006, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மற்ற செய்திகள்
