'என்னோட உயிருக்கு ஆபத்து'... 'முதல்வர் உதவ வேண்டும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குநரின் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் திரைத்துறையின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகம் ஆன இவரின் படங்களில், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவரின் படங்களுக்குத் தனி வரவேற்பு உள்ளது. நீர்ப்பறவை, தர்ம துரை போன்ற படங்கள் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் செய்தவரும் சீனு ராமசாமி தான்.

இந்நிலையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்''. சமீபத்தில் பெரும் சர்ச்சையாக மாறிய 800 பட விவகாரத்தில் சீனு ராமசாமி பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் சீனு ராமசாமி ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
அவசரம்.

மற்ற செய்திகள்
