'அரசியல் கணக்கு மாறுகிறதா'?... 'சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் ராமதாஸின் ட்விட்டர் பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![PMK CHIEF RAMADOSS SLAMS ALLY RULING AIADMK , PRAISES JAGAN PMK CHIEF RAMADOSS SLAMS ALLY RULING AIADMK , PRAISES JAGAN](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/pmk-chief-ramadoss-slams-ally-ruling-aiadmk-praises-jagan.jpg)
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்று வரும் நிலையில், அதிமுக அரசைத் தாக்கும் வகையில் ராமதாஸ் ட்விட்டர் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், ''ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதைச் செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதைக் கண்டு கொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்!'' எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் களத்தில் பரபரப்பிற்கு வித்திட்டுள்ளது. அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அதிமுக அரசை ராமதாஸ் கடுமையாகத் தாக்கியுள்ளது, கூட்டணி கணக்குகள் மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!#JaganMohan #Andhra
— Dr S RAMADOSS (@drramadoss) October 22, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)