டெல்லிக்கு என்ன தான் ஆச்சு?.. தொடர் தோல்விகள்... 'இது' தான் காரணம்!.. 'எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாத்தீங்களா பா?'.. மாட்டிக் கொண்டு முழிக்கும் ரிக்கி பாண்டிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரின் பின்பாதியில் டெல்லி கேபிடல்ஸ் தொடர்ந்து தோல்விப் பாதையில் பயணித்து வருகிறது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த தோல்விகளுக்கு முதல் காரணம் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது தான்.
மூத்த வீரர் ஷிகர் தவான் இந்த விஷயத்தில் தான் தன் அணியை கைவிட்டு வருகிறார். ஷிகர் தவான் 2020 ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் சுமாராக ஆடி வந்தார். 20, 30 ரன்கள் எடுத்த போட்டிகளிலும் நிதான ஆட்டம் ஆடி இருந்தார்.
அவரது ஆட்டத்தால் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. எனினும், அந்த அணியின் பேட்டிங் அப்போது சிறப்பாக இருந்ததால் வெற்றிகள் கிடைத்தது. எனினும், தவான் குறித்து விமர்சனம் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், ரிக்கி பாண்டிங் அவரிடம் பேசி அவரது ரன் குவிக்கும் வேகத்தை மாற்றினார். அடுத்த நான்கு போட்டிகளில் அவர் முற்றிலும் மாறினார். அதிரடி ஆட்டம் ஆடினார். தொடர்ந்து நான்கு போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்த தவான் 69*, 57, 101*, 106* என இரண்டு அரைசதம், இரண்டு சதம் அடித்தார்.
இதில் மூன்று போட்டிகளில் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அபார ஆட்டம் ஆடிய தவான் அடுத்த மூன்று போட்டிகளில் மோசமாக சொதப்பினார். கொல்கத்தா போட்டியில் 6 ரன்கள் எடுத்த அவர் அடுத்து ஆடிய ஹைதராபாத் மற்றும் மும்பை போட்டியில் டக் அவுட் ஆனார்.
அவர் சதம் அடித்த சிஎஸ்கே போட்டி மற்றும் மோசமாக ஆடிய அடுத்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி வரிசையாக தோல்வி அடைந்தது. தவான் துவக்கத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது ஒருபுறம், மற்றொரு துவக்க வீரர் சரியாக அமையாதது ஒரு புறம் என துவக்கம் சரியாக கிடைக்காமல் டெல்லி அணி பேட்டிங்கில் சொதப்பி தோற்று வருகிறது.
தவான் மூன்று போட்டிகளில் ஆடாததால் அவரை நீக்கவும் முடியாது. அதற்கு முன் அவர் சிறப்பாக ஆடி உள்ளார். அவரை எப்படி ரன் குவிக்க வைப்பது என தெரியாமல் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தவித்து வருகிறார். மொத்த டெல்லி பேட்டிங்கும் ஒரே நேரத்தில் ஊசலாடி வரும் நிலையில் மூத்த வீரரும் கை கொடுக்காமல் சொதப்பி வருவது டெல்லி அணிக்கு மேலும் சரிவை கொடுத்து வருகிறது.