'அண்ணாச்சி, இது ரொம்ப ரேர் பீஸ்'... 'ஒரே டீல்ல முடிக்கலாம்'... பேரம் முடிந்த பிறகு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 04, 2021 10:02 PM

திருவள்ளூர் அருகே 5 அடி உயர ராட்சத மண்ணுளிப் பாம்பை 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பலை, வனத்துறையினர் சினிமா பானியில் நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதிரடியாக கைது செய்துள்ளனர்.

tiruvallur mannuli snake illegal market sale crime forest department

திருவள்ளூர் மாவட்ட வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாக மண்ணுளிப் பாம்புகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக எழுந்த புகார் எழுந்தது. இதை தொடர்ந்து தனி பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் மணவாளன் நகர் பகுதியில் விஜயகுமார், பொன்னையன், தங்கமணி என்ற மூவர் மண்ணுளிப் பாம்பை வளர்த்து வருவதாக கிடைத்த தககல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மூவரையும் மண்ணுளிப் பாம்பை வாங்குவது போன்று நடித்து வனத்துறையினர் அவர்களிடமிருந்த 5 அடி உயர மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தனர். கொரனோ வைரஸ் காரணமாக மண்ணுளி பாம்பு கடத்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது திருவள்ளூரில் மண்ணுளிப்பாம்பு விற்பனை மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

தற்போது 4.5 கிலோ எடை, சுமார் 5 அடி உயரமுள்ள ராட்சச மண்ணுளிப்பாம்பு பறிமுதல் செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மண்ணுளிப் பாம்பு மருத்துவத்திற்குப் பயன்படுவது என்று கூறி சட்டவிரோதமாக மண்ணுளிப் பாம்பை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

செங்குன்றம் பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது இந்த மண்ணுளி பாம்பு சிக்கியதாக பிடிப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இந்த மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய் என நூதன முறையில் பேரம் பேசி விற்க முயன்றுள்ளனர்.  இதுவரை பிடிபட்ட பாம்புகளிலேயே இது தான் மிகப்பெரிய மண்ணுளிப்பாம்பு இதுவென்று வனத்துறையினர் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tiruvallur mannuli snake illegal market sale crime forest department | Tamil Nadu News.