'தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்...' 'ஒரு பெண்ணின் குரல்...' 'மொத்தம் மூணே மூணு கால்...' 'போட்ட ப்ளான் சக்சஸ்...' - சுக்குநூறாய் உடைந்து போன நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களுடன் டேட்டிங் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி கூறி மர்ம பெண் ஒருவர் ஆன்லைனில் 25 லட்சம் ஏமாற்றியதாக வாலிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தனியார் நிறுவன மேலாளரான பணியாற்றும் 46 வயதான சந்திரசேகர் சென்னை பம்மல், சங்கர் நகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் செல்ஃபோன் எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய பெண், டேட்டிங் செல்ல ஆசையா எனக் கேட்டு தன் பேச்சை தொடங்கியுள்ளார்.
முதலில் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் பெண்ணின் பேச்சில் மயங்கி உரையாடலை தொடங்கியுள்ளார். நான்கு இளம்பெண்களின் ஃபோட்டோவை அவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு முகம் தெரியாத அந்தப் பெண் அனுப்பியுள்ளார். கூடவே பதிவு கட்டணமாக 1,100 ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதேபோல் தொடர்ந்து மூன்று நாட்கள் ஃபோன் செய்த அந்த மர்ம பெண், தவணை முறையில் 25 லட்சம் ரூபாய் வரை சந்திரசேகரிடம் கறந்துள்ளார். அதன் பிறகு சந்திரசேகர் டேட்டிங்க்கு எப்போ ஆள் அனுப்புவீர்கள் என்று கேட்டால், எதிர்முனையில் முறையான பதில் வரவில்லை.
அதன் பிறகே சந்திரசேகர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்போது சங்கர் நகர் காவல் நிலையத்தில் தற்போது அவர் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
