எதுக்காக இப்படில்லாம் பண்றாங்க...? 'லாஸ்ட் 5 டிஜிட் நம்பர், கூகுள் வாய்ஸ் யூஸ் பண்ணி...! - பேஸ்புக்கில் ஃபேக் ஐடி உருவாக்கி செய்யும் மோசடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகக் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வைத்து போலி முகநூல் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள்.

தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வேறுபல மாநில காவல்துறையினரின் பெயர்களில் ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி, அதன்மூலம் மக்களிடமும் காவல்துறையினர் நண்பர்களிடம் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் கேட்டு புதுவித கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் சிலர்.
சென்னை மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திர குமார் ஆகியோரின் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி நடப்பது தெரியவந்தது.
அதையடுத்து உதவி கமிஷனர் அருள் சந்தோஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தென் சென்னை கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், வட சென்னை இணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டிஜிபி சந்தீப் ரத்தோர் ஆகியோரின் பெயர்களிலும் பெயரிலும் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.
இதற்கெனவே தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டதையடுத்து, மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய கும்பலானது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுகாவில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
மோசடி கும்பலை பிடிக்க, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் கணினி வழிக்குற்றப்பிரிவு உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் ராஜஸ்தான் சென்று ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பின் குற்றவாளிகளை பிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்கான் அவரின் கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கர்நாடகா தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களிலும் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கில் முஸ்தகீன்கானை தெலங்கானா போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரித்தபோதுதான் சிறுவன் ஒருவருடன் சேர்ந்து தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குள் தொடங்கப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்..
அதுமட்டுமில்லாமல் மோசடி கும்பலின் தலைவன் ஷகீல்கான் மற்றும் அவனின் கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவும் தெரியாததால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக இருந்து ஃபேஸ்புக்கை எப்படி ஹேக் செய்வது என்பதைக் கற்றுக்கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூகுள் வாய்ஸையும் செல்போன் நம்பர்களின் கடைசி 5 இலக்க நம்பர்களையும் இவர்கள் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
