'5 வருஷமா இந்த வேலைய பாத்திருக்காரு?!!'... 'வீட்டுக்குள் சிகிச்சையில் இருந்த மூதாட்டி'... 'ஷாக்காகி விசாரித்ததில் வெளிவந்த பகீர் சம்பவம்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சங்கராபுரம் அருகே ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அருகே லாலாபேட்டையில் பொது மக்களுக்கு பட்டா அளிப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ. சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அங்கு முருகன் என்பவருடைய வீட்டில் ஆய்வு செய்தபோது மூதாட்டி ஒருவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்படுவதை பார்த்து அவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளையராஜா (43) என்பவர் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்குமாறு ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலனிடம் அவர்கள் அறிவுறுத்த, அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இளையராஜா வேறு நபரின் சான்றிதழ் மூலம் 5 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தியதுடன், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு இளையராஜாவை கைது செய்த போலீசார், மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
