"3.2 லட்சம் பயனாளர்கள்.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. கல்விக்கு கல்வியும் ஆச்சு!".. நெகிழவைத்த இன்போசிஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 22, 2020 11:18 AM

பெங்களூரு: இன்போசிஸ் என்எஸ்இ இணை நிறுவனர் எஸ்.டி.ஷிபுலால் அறிவிப்புப் படி, அங்குள்ள தொழில்நுட்பத் தளமான ஷிக்ஸலோகம், சார்பில் 10 மாநிலங்களில் தங்கள் தளத்தை விரிவுபடுத்துவதால், 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

3.2 lakh users, 1.5 million school leaders Infosys co-founders plan

உள்ளூர் முக்கியஸ்தர்களும், ஆசிரியர்களும், அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படக்கூடிய மற்றும் தரமான கல்வியை அளிக்க, வழிகாட்டும் இந்த தளம், இதுவரை ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உட்பட கிட்டத்தட்ட 320,000 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டு சமூக தளமானது, பஞ்சாப், டெல்லி, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட 19 மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தம் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 12 மாதங்களுக்குள் மேலும் ஆறு மாநிலங்களுக்கு விரிவடையும் என்றும் கூறப்படுகிறது.

"கோவிட் -19 தொற்றுநோய் கல்வியை பாதித்துள்ளது, இதனால் ஆன்லைன் வகுப்புகள் பெருகி, டிஜிட்டல் வடிவத்துக்கு கல்வி மாறுகிறது. சிக்ஷலோகம் எங்கு ஏற்றுக்கொள்ளப்பட தொடங்கப்பட்டிருப்பதோடு, இந்த சூழ்நிலையில் நம் குழந்தைகளின் கல்வி நலனை நிர்வகிப்பதில் மாநில வாரியான எங்கள் செயல்பாட்டாளர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர்” என்று ஷிபுலால் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “இதற்கென தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு செயல் திறனாளர்களுக்கு ஷிக்ஸலோகம், தேவையான தொழில்நுட்பத்தை உதவிகளையும் வழங்குகிறது. கல்வி தலைமைத்துவ வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளை தீர்க்கவும் இது செயல்படுகிறது. எங்கள் தளத்தில் 3.2 லட்சம் பயனர்களும், 2,500க்கும் மேற்பட்ட கற்பிப்பாளர்களும் இருப்பதால், நாங்கள் தற்போது 15 மில்லியன் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். இது இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 5% ஆகும்” என்றும் ஷிபுலால் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 3.2 lakh users, 1.5 million school leaders Infosys co-founders plan | India News.