மேலும் '2 வாரங்களுக்கு' ஊரடங்கை நீட்டிக்கிறோம்... அதிரடி அறிவிப்பை 'வெளியிட்ட' மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 4 தினங்களே உள்ளதால் மீண்டும் ஊரடங்கு தொடருமா? இல்லை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அரசு அமல்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், ''ஊரடங்கின் போது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்த சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடைகளும் திறந்து இருக்கும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பஞ்சாப் மாநிலம் நாட்டிலேயே முதலாவதாக ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு (மே 17) நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.