நமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 30, 2020 02:22 AM

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் மக்கள் அதிகம் தேடிய உணவுகள் மற்றும் இடங்கள், நாடுகள் குறித்த விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிடும். அதேபோல உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களும் வருடம் தோறும் மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிடும். (இதில் பிரியாணி தான் கடந்த சில வருடங்களாக அனைவரின் தேர்வாகவும் இருந்து வருகிறது)

Lockdown: Banana Bread is The Most Searched Food in Google

அதேபோல தற்போது ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் தேடிய உணவுகளின் விவரம் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைவரும் போட்டிபோட்டு கூகுளில் பிரியாணியைத்தான் அதிகம் தேடி இருப்பார்கள் என்று நினைத்தால், அதுதான் இல்லை. மாறாக குவாரண்டைன் ஸ்நாக்ஸ் என்பதைத்தான் மக்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். இதில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா மக்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த தேடலில் வாழைப்பழ பிரட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்து கேக் செய்வதுதான் அதிகம் பேரின் தேர்வாக இருந்துள்ளது. சாக்லேட் கேக்குகள், கேரட் கேக் மற்றும் பிரபலமான டல்கோனா காப்பி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அடுத்ததாக வீட்டிலேயே ஃபிரைட் ரைஸ் செய்வது எப்படி என்பதை தேடித் தேடி பலர் சமைத்துள்ளனர். இதுதவிர குடும்பத்துடன் சாப்பிடும் டின்னர் உணவுகள் என்ற தலைப்பிலும் அதிகம் பேர் தேடியுள்ளதாக கூகுள் தெரிவித்து உள்ளது.