''காசநோய் தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பு குறையுதா? ''அறிவியல் என்ன சொல்கிறது?...'' 'உலக சுகாதார மையத்தின் திட்டவட்ட பதில்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 30, 2020 08:01 AM

காசநோய் தடுப்பூசி போடும் நாடுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உலக சுகாதார நிறுவனம், இதை மறுத்துள்ளது.

Tuberculosis vaccination does not reduce coronal deaths

கொரோனா வைரஸ், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை புரட்டி போட்டு வரும் நிலையில், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்க தேசம், வளைகுடா நாடுகள் உட்பட, ஆசிய நாடுகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது.

கொரோனா தொற்றை பொறுத்தவரை, அமெரிக்காவில், 326 பேருக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில், 547 பேர், இத்தாலியில் 301 பேர், ஜெர்மனியில் 523க்கு ஒருவர் என அதன் பாதிப்பு உள்ளது.

இந்தியாவில், 44 ஆயிரத்து, 742 பேருக்கு ஒருவரும், தமிழகத்தில், 44 ஆயிரத்து, 400 பேருக்கு ஒருவரும் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

உயிரிழப்பை பொறுத்தவரை, அமெரிக்காவில், 10 லட்சம் பேருக்கு, 172 பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில், 15 லட்சம் பேருக்கு, ஒருவர், தமிழகத்தில், 50 லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே உயிரிழக்கும் நிலை உள்ளது.

கொரோனா உயிரிழப்பு மற்றும் பரவல் குறித்து இதுபோன்ற பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இந்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளின் காரணங்கள் அறியப்பட்டதில், காசநோய் தடுப்பூசியான, பி.சி.ஜி., தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் பாதிப்பு குறைந்திருப்பதாக, ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

சில ஆராய்ச்சி கட்டுரைகளிலும், இந்த கருத்து கூறப்பட்டுள்ளது. ஆனால், 'கொரோனா வைரஸ் தடுப்பில், பி.சி.ஜி., தடுப்பூசி முக்கிய காரணியாக விளங்குவதாக கூறப்படுவதற்கு, அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை' என, உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆனால் பிசிஜி தடுப்பூசி, மற்றும் உணவு முறை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருப்பதால், இந்தியாவில் பாதிப்பு குறைவு என்று, இந்திய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.