”புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” பாட்டுக்கு ஏத்தமாறி செம்ம கிளைமெட் - வேற எங்க இங்கதான்!!...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானலுக்கான தனி மவுஸ் தென் தமிழகத்தில் இப்போவரைக்கும் இருந்து வருகிறது. சீசனுக்கு சீசன் கொடைக்கு குவியும் பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடு இருந்தது இல்லை.

சத்குரு ஜக்கி அவர்களே இதற்கு காரணம் - மர விவசாய முறைக்கு பாராட்டு தெரிவித்த நடிகை !!...
மலைகளின் ரானி ஊட்டி என்றால், இளவரசி என்ற அடைமொழியொடு கம்பிரமாய் குளுகுளு குறையாது காணப்படுவது தான் இந்த கொடைக்கானல். எல்லா சீசனும் கொடையில் ஸ்பெஷல் தான், அந்த வரிசையில் கொடைக்க்கானலில் மீண்டும் உறைபனி காலம் தொடங்கிவிட்டது.உறைபனிக் காலம் என்றாளே கொடை மக்களுக்கு குஷி தான், கூடவே சுற்றுலா பயணிகளுக்கும் தான்.
குளுருக்கு கூடவே மேகம் மறைத்த மலைகளும், வெள்ளைக் கம்பளம் விரித்தது போல உறைப்பனி புற்கள் மேல் படிந்து இருப்பதும் பலரையும் கவர்ந்து வருகிறது.
டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப்பனி காலம் காணப்படும்.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக உறைப்பனி காலம் தானாக தொடங்கிய நிலையில், டிசம்பர் மாதம் உறைப்பனி பொழிவு குறைந்து வந்தது.
தற்போது, உறைப்பனி நிலவுவதால், கொடை மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. கொடை மக்களுக்கு குளிரினால் அவதி இருந்தாலும், உறைப்பனியின் ரம்மியமான காட்சி அனைவரையும் கவர்ந்து செல்கிறது.

மற்ற செய்திகள்
