‘கொடைக்கானலில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ...’ ‘மூலிகை செடி, மரங்கள் அனைத்தும் சாம்பல்...’ பரிதாபத்தில் வாயில்லா ஜீவன்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 11, 2020 08:29 PM

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டுத்தீ அதிவேகமாக பரவி வரும் செய்தி அனைவரையும் சோகமடைய செய்துள்ளது.

Uncontrolled wildfire is spreading near Kodaikanal

தமிழகத்தில் மலைகளின் அரசி என்று கொடைக்கானல் பகுதியின் அருகே உள்ள கோவில்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயானது வனப்பகுதியின் அருகில் இருக்கும் தனியார் வருவாய் நிலத்தில் இருந்து அருகில் இருக்கும் தோட்டங்களுக்கு பரவி வனப்பகுதிக்கு பரவியுள்ளது.

மேலும் இந்த காட்டுப்பகுதியில் மிக அரிதாக கிடைக்கும் மூலிகை மரங்கள் காட்டுத்தீயால் கருகிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காடுகளில் உயிர் வாழும்  வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதி விரைவாக பரவி வரும் காட்டுத்தீயால் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பூகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த வருடம் இதே போல் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவி சுமார் 1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியது. அதுமட்டும் இல்லாமல் 1400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. நான்கு மாதங்களாக போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #KODAIKANAL