legend updated

‘ட்ரெண்டியாக’ மாற பிரபல நிறுவனம் செய்த காரியம்..? ‘நீங்களே இப்படி பண்ணலாமா..’ என வலுக்கும் கண்டனம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 02, 2019 04:29 PM

கூல் மற்றும் ட்ரெண்டி எனப் பெயரெடுக்க ஐபிஎம் நிறுவனம் தனது பணியாளர்கள் 1 லட்சம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

IBM Fired 1 lakh Older Employees to Look Cool Trendy

இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களுக்கு பிடித்த மாதிரி கூல் மற்றும் ட்ரெண்டியாக மாற பிரபல நிறுவனமான ஐபிஎம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பணியாளர்களை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இளம் பணியாளர்களால் அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் நிலவும் சூழல் போல ஐபிஎம் நிறுவனத்திலும் இருக்க வேண்டுமென இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

108 ஆண்டுகள் பழமையான ஐபிஎம் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடலாமா என பல தரப்பிலிருந்தும் இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் தனது பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை நீக்கியுள்ள இந்த நிறுவனம், அதை ஈடுசெய்ய தற்போது அதிரடி ஆள் சேர்ப்பிலும் ஈடுபட்டுள்ளதாக இதன் முன்னாள் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள ஐபிஎம் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

Tags : #IBM #COOL #TRENDY #FIRED #OLDER #EMPLOYEES