‘பேராசிரியர் பண்ற வேலையா இது’.. மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் வந்த போட்டோ.. கல்லூரி நிர்வாகம் எடுத்து அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் விரிவுரையாளர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டு பகுதியில் அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு பொதுப்பணியியல் துறையில் தற்காலிக விரிவுரையாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில் தான் பயிற்சி செய்த புகைப்படங்களை மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்களில் செந்தில்குமார் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து மாணவிகள் இதுதொடர்பாக பேராசிரியைகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில்குமார் தனது அரை நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை பணியில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழலில், பணி நீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் பேராசிரியைகள் பற்றி சமூக வலைதளங்களில் செந்தில்குமார் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முருகன், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் கல்லூரி விரிவுரையாளர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
