‘தேர் உச்சியில் உரசிய மின் கம்பி’.. தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்தது எப்படி? தீயணைப்பு அதிகாரி சொன்ன பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூரில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த தேரோட்டமானது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அப்படியே நேற்றும் நடைபெற்றுள்ளது
களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக தேர் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர் சென்ற இடத்தில் தண்ணீர் இருந்ததால் பலர் தள்ளி நின்றதாகவும், அதனால் 50-க்கு மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர் விபத்து எப்படி நிகழ்ந்து என தஞ்சை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா (பொறுப்பு) தகவல் தெரிவித்துள்ளார். அதில், தேர் வளைவில் திரும்பும்போது தேரில் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. அதனால் அதை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது என தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/